15,000 இலஞ்சம் தராததால் காலதாமதப்படுத்திய வரி வசூலிப்பர் மீது காவல் அதிகாரியிடம் புகார் அளித்த மறு நாளே வீட்டுவரி போட்டுத்தர இசைவு தெரிவித்தனர்

இலஞ்சம் தவிர் !    நெஞ்சம் நிமிர்!!

 

நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை சார்பில் திருப்பூர மாநகராட்சி் 1ம் மண்டல அலுவலகத்திற்கு முற்றுகையிட செல்லும் செய்தி தெரிந்து முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

 

15,000 இலஞ்சம் தராததால் வீட்டுவரி போட வேண்டுமென்றே காலதாமதப்படுத்திய வரி வசூலிப்பவரைக் கண்டித்து

 

நாள் 4/9/18 மாலை 4மணிக்கு திருப்பூர் மாநகர முதல் மண்டல அலுவலகம் சென்ற  நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை   மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்கள் தலைமையிலான குழுவினர்   வரி வசூலிப்பவர் மீதான புகாரை கண்காணிப்பாளரிடம் முறையிட்டு கேள்வி கேட்டதும்     “இலஞ்சம் தராமலே”  நாளை வீட்டுவரி போட்டுத்தர இசைவு தெரிவித்தனர்.

 

இதற்கு பாதுகாப்பு கேட்காமலே முழுப்பாதுகாப்பு வழங்கிய  15வேலம்பாளையம் காவல் துறையினர்க்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம்.

 

இலஞ்சம் தராமல் அரசு சேவைகள் பெற்றுத் தந்து பொதுமக்களுக்கு உதவும் பணியில்

என்றும்

கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை

நாம் தமிழர் கட்சி.

என

சுழற்சங்கம் .கி செல்வம்

மாநகர செயலாளர்.

ப.செயராமன்

மாவட்ட செயலாளர்.

திருப்பூர் மாவட்டம்.

94439 34574

90430 40787

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன