ரூபாய் 2000 இலஞ்சம் பணம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

வணக்கம்உறவுகளே!

 

என்பெயர் செசிசுடீபன்.நான் நாம் தமிழர் கட்சியின் மகளிரணி செயலாளராக இருந்து கொண்டு வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறேன்.

 

என் தந்தை விபத்தில் இறந்து விட்டார். அதற்கான இழப்பீடு பெற அழைத்ததின்பேரில் கடந்த 12/11/18 அன்று நான் கோட்டாாட்சியர் அலுவலகம் சென்று கேட்டபோது அவ்வலுவலக உதவியாளர் 3000 ரூபாய் கொடுத்தால் தான் அந்த காசோலை தருவேன் என்றார்.

 

எனவே இதுகுறித்து   நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் அக்கா அமுதாநம்பி அவர்களிடம் கூற அவர்கள் வில்லிவாக்கம் தொகுதியில் கட்சியின் தொகுதி தலைவர் மணிகண்டன் அவர்களிடம் உதவுமாறு கூறினார்.

 

மணிகண்டன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறை மாநில செயலாளர் நேர்மைமிகு ஈசுவரன் அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டார்.

 

அவர்கள் ஆலோசனைப்படி 13/11/18 அன்று கோட்டாட்சியர் அலுவலகம் சென்று அந்த உதவியாளரிடம் 2000 ரூபாயை கொடுத்து காசோலை பெற்று கொண்டு வெளியே வந்தோம்.

 

அது பற்றி சொன்னதும் ஈசுவரன் அய்யா அவர்கள் கால்மணி நேரம் கழித்து உள்ள போங்க 2000ரூபாயும் தருவாங்க என்று சொன்னார்கள்.

 

ஆச்சரியமென்னவென்றால்

 

உள்ளே சென்றால் அய்யா சொன்னது போலவே அந்த உதவியாளர் எதுவும் பேசாமல் 2000 ரூபாய் என்னிடம் தந்துவிட்டார்.

 

உண்மையிலேயே நான் நாம் தமி்ழர் கட்சியில் இருப்பதை பெருமையாகவு கௌரவமாகவும் உணர்கிறேன்.

 

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்

 

இலஞ்சம்தவிர்!  நெஞ்சம்நிமிர்!

 

உங்கள் தொடர்புக்கு

 

நாம்தமிழர்கட்சி

கையூட்டுஊழல் ஒழிப்புப்பாசறை

99409 93488

82200 44957

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன