மோசடிபேர்வழியை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை – 08/03/2019

*இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!*
*மோசடிபேர்வழியை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை*
திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த நமது உறுப்பினர் விசுவநாதன் என்பவரிடம் இடுவம்பாளையம் மின்வாரிய பொது ஊழியர்கள் மின்வழிப்பாதை மாற்றிட  5கம்பம் போடவேண்டுமென்று கூறி 1,81,000 ரூபாயை 4 மாதங்களுக்கு முன்பே பெற்றுக்கொண்டு இன்றுவரை மின்பாதை இணைப்பு மாற்றிக் கொடுக்கவில்லை.
ஆனால் இணையத்தில் அப்பணி முடிவுற்றதாக பொய்யாக பதிவு செய்துள்ளனர்.எனவே இப்படிப்பட்ட மோசடிக்காரர்களை (இலஞ்சப்பிச்சை கிடைக்காத ஏக்கத்தில் காலதாமதம் செய்யும்) உடனே பணி நீக்கம் செய்திடக்கோரி திருப்பூர் மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகத்தை நாள் வெள்ளிக்கிழமை 8/3/2019 மதியம் 12 மணியளவில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
என
*கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை*
*நாம் தமிழர் கட்சி*
*திருப்பூர் மாவட்டம்*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன