கையூட்டு என்றால் என்ன ?

கையூட்டு என்றால் இலஞ்சம் என்று பொருள். இலஞ்சம் எனும் சொல் தமிழ்ச்சொல் அல்ல இப்படி  தமிழ் அல்லாத பல சொற்களை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். இதை தவிர்க்கவே கையூட்டு என்று பெயரிடுகிறோம்.

நாம் ஏற்றிருக்கும் இந்திய ஒன்றியத்தின் சட்டப்படி ஒவ்வொரு அரசு துறைக்கும்,  அதன் கீழ் உள்ள உப துறைகளிலும் மக்கள் சேவையாற்றும் அரசு ஊழியர் யாரேனும் தங்கள் சம்பளம் தவிர தங்களின் கடமையை செய்வதற்கோ, வேகமாக செயல்படுத்துவதற்கோ, விதிமுறைகளை மீறி செயல்படவோ பணம், பொருள் அல்லது அதற்க்கு சமமான வேறு எந்த பிரதிபலனையும் நாடினால் அது கையூட்டு என்றாகும்.

உதாரணத்திற்கு ஒரு குடும்ப அட்டை (RATION CARD) வாங்குவதற்கு வெறும் ரூ 60 மட்டுமே அரசுக்கு நாம் கட்டவேண்டிய தொகை அது தவிர்த்து அந்த பணியை செய்து முடித்த அரசு அலுவலருக்கு தேநீர் வாங்கிக்கொடுத்தாலோ, படிவம், மனு எழுத பேணா, பேப்பர் போன்ற பொருட்களை இலவசமாக மக்களிடம் வாங்கிவரச்சொல்வது போன்ற சிறு செயல்கள்கூட கையூட்டு எனப்படும்.

இத்தகைய சிறிய தவறுகள் செய்தாலே குற்றம் என்றால் பெரும் பணம் அல்லது பொருள் பெற்று அரசாங்க சேவைகளை முறையின்றி செய்யும் அனைவரும் குற்றவாளிகளே.

அத்தகைய குற்றங்களை தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதர்க்கும் கையூட்டை மற்றும் ஊழலை தடுத்திடவும் ஐயா நேர்மைமிகு. திரு ஈஸ்வரன் அவர்களால் தொடங்கப்பட்டு,  தனி மனிதனாக கடந்த 10 வருடங்களுக்கும் மேல் இந்த சேவையை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

தமிழ் பற்றாலரும் தமிழ் தேசிய சிந்தனையாளருமான ஐயா ஈசுவரன் அவர்களின் சேவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன்.சீமான் அவர்களால் ஈர்க்கப்பட்டு, தமிழர் அறம் சார்ந்தும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நிவாகம் செய்ய உறுதியேர்த்து அதை நடைமுறை படுத்திவரவும்,  நல்ல செயல்களுக்கு ஆதரவு தரும் வண்ணம், குறுகிய வட்டத்தில் செய்துகொண்டிருந்த சேவையை இத்தமிழகமெங்கும் கொண்டுசென்றிட உதித்தது தான் கையூட்டு ஊழல் ஒளிப்பு பாசறை இது நாம் தமிழர் கட்சியின் ஒரு கிளை அமைப்பாக செயல்பட முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆகையால் ஒவ்வொரு ஊரிலும் வசிக்கும் படித்த விபரம் உள்ள இளைஞர்கள் தமது பகுதிகளில் நடக்கும் கையூட்டு, இலஞ்சம், சட்ட விரோத, மற்றும் சட்டத்தை மீறும் செயல்களை பார்த்து கொதித்து என்ன செய்வது என்று புரியாமல் இதுவரை இருந்திருந்தால் இனியும் பொறுக்காமல் பொறுப்புடன் தங்கள் பகுதிகளில் இப்பணியை நீங்களே செய்திட நாம் பயிற்சியுடன் ஆதரவும் தருகிறோம்.

இளைஞர்கள் கையில் தான் இனி புதிய நாடு என்ற காலம் ஐயாவின் கனவை நினைவாக்க நாம் தமிழர் கையூட்டு ஒழிப்பு பாசறையில் உடன் சேர்ந்து பணியாற்றிட வாரீர்.

நாம் தமிழர்.