தாக்கப்பட்ட நீதி!! நடந்த பேச்சு வார்த்தை!! சுமூக முடிவு!!

கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர்கள் அவர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி திரு.கண்ணன் அவர்கள் அரசூர் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.ரமேஷ்குமார் அவர்கள் முதலமைச்சர் தணிப்புரிவு உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கொடுத்து வந்தார்.

 

அதையடுத்து ரமேஷ்குமார் இல்லாத போது அவரது வீட்டுக்கு சென்ற கண்ணண், அங்கிருந்த பெண்களை மிரட்டியதுடன், அவரது தறிகுடோனை புகைபடம் எடுத்துள்ளார்.

இது நடந்தது முடிந்த சில நாட்கள் கழித்து 26.04.2017 அன்று, கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்காக சில கோரிக்கைகளை முன் வைத்து அரசூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் கோரிக்கை மனுவுடன் கிராம நிர்வாக அதிகாரி திரு.கண்ணன் அவர்களை சந்தித்தார்..
இந்த கோரிக்கையால் எரிச்சலடைந்த கண்ணண் அவர்கள், மனு கொடுக்க வந்த ரமேஷ்குமாரை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்கினார். தாக்கியதுடன் அவரது செல்போனையும் சேதப்படுத்தினார் கிராம நிர்வாக அதிகாரி கண்ணன்.
இதில் பலத்த அடிபட்ட ரமேஷ்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன், தன்னை தாக்கிய கிராம நிர்வாக அதிகாரியை கைது செய்ய வேண்டும், கிராம நிர்வாக அதிகாரி அரசூரிலேயே தங்கி பணிபுரிய வேண்டும், தான் வைத்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சிகிச்சையின் போதே தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.

அதே சமயத்தில் பணிசெய்ய விடாமல் கிராம நிர்வாக அதிகாரியை தடுத்தது, கிராமநிர்வாக அதிகாரியை தாக்கியது என்று பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி சூலூர் காவல் நிலையத்தில், ரமேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்ய, அரசூர் கிராம நிர்வாக அதிகாரி கண்ணண் ஏற்பாடு செய்தார்.

நிலைமை இப்படி சென்று கொண்டு இருக்கும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ்குமார் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ரமேஷ்குமார் தனது நண்பர்கள் தெ.பிரபாகரன், சூலூர் நடராஜ் ஆகியோருடன் நேராக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார்கள்.
இதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் தாசில்தார் உட்பட்ட அதிகாரிகள் ரமேஷ்குமார், பிரபாகரன், சூலூர் நடராஜ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டதா? பேச்சு வார்த்தை எந்த கட்டத்தில் உள்ளது? பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்குமா? இல்லை….
ரமேஷ்குமார், பிரபாகரன், நடராஜ் ஆகியோர்
சிறையில் அடைக்கப்படுவார்களா?
சிறையில் அடைக்குப்பட்டால் அங்கும் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடர இருக்கும் இவர்களுக்காக மற்ற சமூக ஆர்வலர்கள் எந்த வகை போராட்டத்தை கையில் எடுப்பார்கள்?
விரைவில்……

பேச்சு வார்த்தையின் முடிவில் இரண்டு தரப்பும் வழக்குகளை வாபஸ் பெற்றனர்.
கிராம நிர்வாக அதிகாரி அரசூரிலேயே தங்கி பணிபுரிய சம்மதித்தார்.
ரமேஷ்குமாரை தாக்கியதற்கு கிராம நிர்வாக அதிகாரி வருத்தம் கோரினார்.
இதை தொடர்ந்து ரமேஷ்குமார், பிரபாகரன், சூலூர் நடராஜ் ஆகியோரின் உண்ணாவிரதத்தை சூலூர் வட்டாட்சியர் திரு.பழனி, அவர்களும் துனை வட்டாட்சியர் திரு.முத்துக்குமார் அவர்களும் பழரசம் வழங்கி முடித்து வைத்தனர்.
போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கும்,
சுமூக முடிவுக்கு உழைத்த வட்டாட்சியர், துனை வட்டாட்சியர், சூலூர் வட்டத்தின் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

 

சூ. மா.நடராசன்.
சோமனூர் பிரபாகரன்.
அரசூர் ரமேஷ்குமார் மூவர் முயற்சியால்
தாக்கப்பட்ட நீதி!! நடந்த பேச்சு வார்த்தை!! சுமூக முடிவு!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன