திருப்பூர் மாவட்ட உறுப்பினருக்கு இழந்த ரூபாய் 3800 பணம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் உறுப்பினர் ஆனதால் எனக்கு ஒரு சேவைக்கே 3800 ரூபாய் மிச்சமானது.

 

வணக்கம் என் பெயர் சீனிவாசன்.   நான் திருப்பூர் பெரியாண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன்.

 

நான் இடுவாய்  பஞ்சாயத்துக்குட்பட்ட  அண்ணாமலை கார்டனில்  உள்ள எனது வீட்டிற்கு கட்டிட வரைபட அனுமதி மற்றும் வீட்டுவரிக்காக இடுவாய் பஞ்சாயத்து கிளர்க் அவர்களிடம் விசாரித்தபோது 8000 ரூபாய் வரும் என்று சொன்னார்.

 

நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை தென் மேற்கு மண்டல செயலாளர்  ராக்கியப்பன் அய்யாவிடம் இதுபற்றி கூறி ஆலோசனை கேட்டு அவர் கூறியபடி நாங்கள் 8000ரூ செலுத்தினோம்.

 

அதே  மாதிரி வேலை முடிந்ததும் ரசீது கேட்டேன் 4,200  ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்தார்.

 

அதன் பிறகு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் திருப்பூர் மாநகராட்சி 4 மண்டல பொறுப்பாளர் செல்வகுமார் மற்றும் 58 வட்டம் அயோத்தி அவர்களிடம் 3/12/2018 அன்று கூறினேன்.

 

அவர்கள் 4/12/2018 அன்று பஞ்சாயத்து  அலுவலரிடம் வந்து 8000 பணம் வாங்கினீர்களே 4200க்கு மட்டும்தான் ரசிது உள்ளது மீதி பணம் எங்கள் உறுப்பினர்க்கு வேண்டுமென்று கேட்டபோது  ஆட்களுக்கு சம்பளம் தருவதற்கு தான் நான் வாங்கினேன் என்று கூறினார்.

 

பிறகு் பிடிஓ அவர்களிடம் புகார் தெரிவித்தோம். பிடிஓ அவருடன் பேசியதும் மீதமுள்ள 3800  ரூபாய் பணத்தை 5/12/2018 அன்று திருப்பி கொடுத்து விட்டார்.

 

உண்மையிலேயே நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையில் உறுப்பினரா இருப்பது பெருமையாகவும் கௌரவமாகவும் உணர்கிறேன்.

 

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்.

என

சீனிவாசன்

77082 55777

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை   நாம் தமிழர் கட்சி. திருப்பூர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன