கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர், அலசநத்தம் சிலிக்கான் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 40 வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர் கணக்கு (EB Reading) எடுக்காமலே இரசிது போட்டு அந்த நாற்பது வீடுகளுக்கும் அனுப்பியுள்ளார்கள்

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!

 

நாம் தமிழர் கட்சி் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் இன்றைய நிகழ்ச்சி

 

கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர், அலசநத்தம்  சிலிக்கான் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 40 வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர் கணக்கு (EB Reading) எடுக்காமலே இரசிது போட்டு அந்த நாற்பது வீடுகளுக்கும் அனுப்பியுள்ளார்கள்..

 

இதனை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நகர செயலாளர் திரு இரசினிகாந்திடம் 29.10.2018 மாலை 4:00 மணிக்கு புகார் செய்துள்ளனர்.

 

அதன் பேரில் 30.10.2018 அன்று காலை 10:30 ஓசூர் கிளை மின்சார வாரிய அலுவலரிடம் தொடர்பு கொண்டு மேற்படி நமது நகர செயலாளர் ரசினிகாந் பேசியதும்.

 

உடனடியாக தொடர்பில் வந்த ஏஇ , ஏடி ஆகிய மின்சார வாரிய  அலுவலர்கள் நாங்கள் நேரில் வந்து சரி செய்து விடுகிறோம் , பிரச்சனையை பெரிது படுத்தாதீர்கள் என்று கூறி்படி இன்று சிலிக்கான் நகருக்கு வந்து ஒவ்வொரு வீடாக சென்று மின்கணக்கு (EB Reading) எடுத்து சரியான கட்டணங்களை குறிப்பிட்டுவிட்டு சென்றார்கள்..

 

நாம் தமிழர் ஒருவரால் நாற்பது பேருக்கும் நல்லது நடந்தது

 

அண்ணன் சீமான் சொல்வது.போல்

 

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!

 

என,

கையூட்டு, ஊழல் ஒழிப்புப் பாசறை

நாம் தமிழர் கட்சி

ஓசூர்

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன