கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

ஓசூர் “மோர்னப்பள்ளி 2 வார்டு பஞ்சாயத்துக்குட்பட்ட இஸ்கான் கோவில்” அருகில் உள்ள ஜெய் நகர் குடியிருப்பு வாசியான முருகேசன் என்பவரது வீட்டு மாடியை ஒட்டிச்சென்ற மின்சார கம்பியை ஆரடி தூரம் தள்ளி வைக்க சொல்லி கடந்த “ஓராண்டாக போர்மேன் மற்றும் மின்சார வாரிய அலுவலரிடம் போராடிய” முருகேசன் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஓசூர் கிளை மின்சார வாரியத்தின் செயலை பற்றி கடந்த ஞாயிறன்று “நாம்தமிழர் கட்சி #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை“சார்பாக மோர்னப்பள்ளியில் ஊழல் , இலஞ்சமில்லா மாதிரி வார்டு உருவாக்கும் பணியின் போது நமக்கு தகவல் அளித்தார்.. அதன் பேரில் ஓசூர் கிளை மின்சார வாரிய அலுவலரை தொடர்பு கொண்ட கையூட்டு, ஊழல் ஒழிப்புப் பாசறை மேற்படி நடவடிக்கை எடுக்க சொல்லி பேசினோம்!
அதன் பலனாக 17.09.2018 நேற்று முருகேசன் வீடு ஒட்டிச்சென்ற மின்சார கம்பியை மாற்றியமைத்துள்ளார்கள் மின்சார ஊழியர்கள்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன