கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!!

ஓசூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி-#கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறைசார்பாக கடந்த மடங்கல் (ஆகசுட்டு)மாதம் 15 ம் நாள் #பேகேபள்ளி_கிராமசபை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட #தீர்மானம்_எண்_11 படி
“தீர்வு கண்டுள்ளது!”
#கேகேப்பள்ளி கிராம சாலையில் 500 அடி தூரம் மேடு , பள்ளம் உள்ள சாலையை சீரமைக்கப்பட வேண்டும் என்ற “நாம் தமிழர் கட்சி மக்கள் மூலம் முன்மொழிந்த கோரிக்கையை” ஏற்று இன்று 02.10.2018 அதற்கான வேலைகளை துவங்கியுள்ளது கிராமசபை…

அதன் படி அதே தேதியில் போடப்பட்ட #பொருள்_20_தீர்மானம்_20 பேகேப்பள்ளி ஊராட்சியில் அரசு மதுபான கடையை ஊராட்சியிலிருந்து அகற்ற கோரிய #தீரமானம்_20 ஐ நிறைவேற்றாத கிராமசபையை கண்டித்து “ஊர் மக்களின் கையெழுத்துடன் அரசு மதுபான கடையை அகற்றக்கோரிய பொது மனு” ஒன்றை இன்று கிராமசபை தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் “அரசு மதுபான கடையை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அகற்றவில்லையென்றால் #மக்கள்_திரள்_போராட்டம் ஒன்றை பேகேபள்ளி பஞ்சாயத்து சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.!

அதன் படி தீர்மானம் 20,21,22 படியே ,
பேகேப்பள்ளி (சர்க்கிள்),எழில் நகர் போன்ற இடங்களில் மக்கள் பாதுகாப்பு கருதி காவல்துறை கூடாரம் அமைக்க வலியுறுத்தி #தீர்மானம்_20 ஐ அங்கிகரித்தல்..

#டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிய மறு #தீர்மானம்_21கண்டனத்துடன் அங்கிகரித்தல். ..

#தீர்மானம்_22 பேகேபள்ளி சுற்றுவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால்;அந்த தொழிற்சாலை கழிவுகள் சுற்றுவட்ட ஏரிகளில் கலக்கிறது. அதனால் சுற்றுசூழல் மிகவும் மாசடைந்துள்ளது.
அதனை தடுக்கும் விதம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என #தீர்மானம்_22 அங்கிகரித்தல்…

என ,மக்களோடு இணைந்து நாம் தமிழர் கட்சியின் தொடர்ச்சியான செயல்பாடு மாற்றுமொழி பேசும் மக்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

#சொல்லுக்கு_முன்_செயல்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன