கடலூர் மாவட்டத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலர் பெற்ற இலஞ்சமாக ரூபாய் இரண்டாயிரம் (2000) திரும்ப பெறப்பட்டது.

இழந்த இலஞ்ச பணம் 2000ரூ இவர்களால் திரும்ப கிடைத்தது.

 

அனைவருக்கும் வணக்கம் .என் பெயர் சுதா,க/பெ.பன்னீர் செல்வம்:-9787108237 நான் கடலூர்  புவனகிரி வட்டம் பெரியகுமட்டி ஊராட்சியில் வசிக்கிறேன்.

 

நான் கடந்த 9-10-2018 அன்று இருப்பிடச்சான்று வாங்க கிராம நிர்வாக அதிகாரியிடம்  சென்றிருந்தேன்.

 

அவர் 10.000ரூபாய் கேட்டார் .என்னிடம் அவ்வளவு பணம் இல்லை ஏதோ என்னால் முடிந்தது ஆயிரம் ரூபாய் வைத்துக்கொண்டு சான்று கொடுங்கள் என்று கேட்க 2000 ரூபாய் கொடு என்றார். இரண்டாயிரத்து கொடுத்து அன்றே இருப்பிடச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு பெரும் மன உளைச்சலோடு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

 

பிறகு இது பற்றிய தகவல்களை தோழியிடம் கூறி வருத்தப்பட்ட போது அவர் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பற்றி கூறினார்.

 

இதனை தொடர்ந்து 13-10-2018 அன்று மேற்கண்ட விபரங்களை நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தரமூர்த்தியிடம் புகாராக அளித்தேன்.

 

அதன் பேரில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில செயலாளர் திரு.நேர்மைமிகு.செ.ஈசுவரன் அவர்களின் வழிநடத்தலில் பேரில்

 

கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெ.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர் வெ.புஷ்பராஜா ஆகியோர் எடுத்த நடவடிக்கையில் மறுநாளே என்னிடம் லஞ்சமாக பெற்ற 2000 ரூபாயை  எனது வீடு தேடி வந்த சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் எனது கையில் கொடுத்துவிட்டு சென்றார்.

 

இப்படி ஒரு நிகழ்வை நான் இதுவரை உலகத்தில் எங்கும் நடந்ததாக கண்டதுமில்லை அரசியல் வட்டத்தில் இது போல் ஒரு செயல் சாத்தியமாகும் என்று நினைத்ததுமில்லை

 

முதன்முறையாக நாம் தமிழர் கட்சியில் புகார் அளித்து முதலை வாயில் சென்றதை மீட்டு திரும்ப கிடைத்ததை நினைத்து பெருமை அடைகிறேன்.

 

இதுபோன்ற நேர்மையான வழியில் பயணிக்கும் கட்சி மேன்மேலும் வளர பொது சேவை தொடர எனது வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டு வணங்கி மகிழ்கிறேன் நன்றி,,,,

 

இதே போன்று நீங்களும் கடலூர் மாவட்டத்தில் இலஞ்சம் இல்லாமல் அரசின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இலஞ்சம் கொடுத்து இருந்தால் அந்த பணத்தை திரும்ப பெறவும் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் அவர்களை தொடர்பு கொள்ள

 

ஜெ.சுந்தரமூர்த்தி:- 97503 13162,

கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்,

கடலூர் மாவட்டம்,

 

வெ.புஷ்பராஜா:- 80980 96614

மாவட்ட செயலாளர்

சிதம்பரம்.

 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அவர்களது சேவைகளை பெற விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

 

நேர்மைமிகு,செ.ஈசுவரன்,பேச:- 82200 44957.

மாநில செயலாளர்

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை

நாம் தமிழர் கட்சி,

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன