ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறை ஓசூர் சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டது.

ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரில் வசிக்கும் குடும்பம். அப்பா, அம்மா, மகள்கள் என நான்கு பேர். அப்பாவிற்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையால் வேலையை இழந்துவிட்டார்.
அம்மாவிற்கு வயது மூப்பு காரணமாக வேலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை, இரண்டு மகள்கள் ஒருவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை, ஒருவர் பட்டதாரி தமிழக வேலைவாய்ப்பில் வட இந்தியர்கள் படையெடுப்பால் வேலை கிடைக்க வில்லை.
மிகவும் இக்கட்டான நிலையில் ஒரு வேலை உணவுடன் உறங்க சென்ற இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறை. நாம் தமிழர் கட்சி ஓசூர் சார்பாக இரண்டாயிரம் ரூபாய்க்கு அரசி, பருப்பு , எண்ணெய், உப்பு என உணவு பொருட்களை வாங்கி கொடுத்து கையில் ஐநூறு ரூபாய் மருத்துவ செலவுக்கு கொடுத்து அந்த ஏழை குடும்பத்திற்கு உதவினோம்.
அந்த பட்டதாரி பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுக்க முழு முயற்சியை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என அந்த அம்மாவிடம் உறுதியளித்தோம். அந்த குடும்பத்திற்கு சீமானின் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் அம்மா என்று ஆறுதலை கூறி வந்தோம்.
ஆயிரம் சொற்களை விட ஒரு செயல் உன்னதமானது.!
என, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கருமலை மேற்கு மாவட்டம் மற்றும் ஓசூர் தொகுதி.
உதவிக்கரம் செய்தவர்கள்:
சி.இரா.பார் தமிழ்ச்செல்வன்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மேற்கு மாவட்டச் செயலாளர்.
இரசினிகாந்து
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கருமலை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்.
சிவ. இராசேந்திர சோழன்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை தொகுதிச் செயலாளர் ஓசூர்.
சு.சுடலைமணி
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை. நல்லூர் ஒன்றியச்செயலாளர்.
நாகேந்திரன்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பேகேபள்ளி ஒன்றியச்செயலாளர்.
ஆனந்தன்
மூக்கொண்டபள்ளி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை வட்டச்செயலாளர்.
பேச
9449117847, 8973767987, 9865776595, 9632828438