இலஞ்சமாக கொடுத்த 3400 ரூபாய் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

இழந்த இலஞ்ச பணம் இவர்களால் எனக்கு திரும்ப கிடைத்தது.

 

என் பெயர் அருள்இரவி ஓசூர்  அலசநத்தம் நரசிம்மா காலணியில் வசிக்கிறேன்.

 

நான் கடந்த 15/10/18 திங்கள்  கிழமையன்று புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு  பேசியதும்

 

மின்சார வாரிய அதிகாரியோ ரூபாய் ஐந்தாயிரம் புதிய மின் இணைப்புக்கு செலவு ஆகும் என்று கூறினார்

 

அதன்படி மேற்படி அதிகாரி அன்று மதியமே எனது வீட்டிற்கு நேரிலே வந்து உரூபாய்  5000 பெற்று சென்றுவிட்டார்.

 

மறுநாள்  செவ்வாய்க்கிழமையன்று காலை பத்து மணிக்கு புதிய மின் இணைப்புை வழங்கினார்.

.

மேற்படி கட்டிய தொகைக்கு இரசிது கேட்டேன். ஆனால் , 1600 ரூபாய்க்கு மட்டும் இரசிது போட்டு கொடுத்தார்.

 

நான் ஏற்கனேவே ஓசூர் நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு,ஊழல்ஒழிப்பு பாசறை யின் செயல்பாடுகளை கேள்விபட்டிருந்தேன்,

 

உடனே அந்தபபாசறையின் ஒசூர் தொகுதி  செயலாளர் ராசேந்திரசோழன் அவர்களை நேற்று 17/10/18 மாலை தொடர்பு கொண்டு பேசினேன்.

 

அவரோ நாளைக்குள் உங்களது பணத்தை பெற்றுத் தருகிறோம் என்று வாக்குறுதியளித்தார்.

 

சொன்னபடியே அப்பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. ஈசுவரன் ஐயாவின் ஆலோசனையின் பேரில் மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி இன்று 18/10/18 மாலை 6மணிக்கு எனது பணத்தை மீட்டுகொடுத்துள்ளார்கள்.

 

நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால்  எனக்கே திரும்பப்பெற்றது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

 

இலஞ்சமாக கொடுத்த 3400 உரூபா பணத்தை திரும்ப பெற்று கொடுத்த இலஞ்ச ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 

மேலும் இவர்களுடன் இணைந்து நானும் இலஞ்சத்தை ஒழிக்க களமாட முடிவு செய்துள்ளேன்.

 

இப்படிக்கு.

அருள் இரவி

நரசிம்ம காலணி

அலசநத்தம் ,ஓசூர்.

தொடர்பு.எண் 7618788876

 

நீங்களும் கிருட்ணகிரி மாவட்டத்தில் உங்கள் தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற

அவர்கள் தொடர்பு எண்

8973767987

9865776595

9886488417

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன